Tuesday 28 July 2015

மாத்தி யோசி.

எங்க  பக்கத்து  வீட்ல  ஒரு  டீச்சரம்மா
இருக்காங்க. சனி, ஞாயிறு களில்  3  முதல்
8 வயசு குழந்தைகளுக்கு  வித்யாசமான  முறையில்
  பாடம்  சொல்லி  கொடுப்பாங்க.
 3- வயசுக்  குழந்தைகளுக்கு  மழலைப்  பேச்சு
 மாறி  தெளிவான  பேச்சு  வரும் பருவம்.

இங்லீஷ் ல  டங்  ட்விஸ்ட் டுனு சொல்லு வாங்க
 இல்லியா?  அதற்கான  பயிற்சி  சொல்லிக்
 கொடுப்பாங்க. இங்லீஷ்ல கொஞ்சம், தமிழ்ல  கொஞ்சம்னு
மாறி  மாறி  சொல்லிக்  கொடுப்பாங்க.
எல்லாமே  சுலபமான  வார்த்தைகளாகத்
 தான் இருக்கும்
  இங்லீஷில,  GOOD  BLOOD. bad  bloodதமிழில்
 எங்க  தாத்தா  தெச்ச  சட்டை.  னு
 சொல்ல  சொல்லு  வாங்க. சில  கழந்தைக
 சரியா  சொல்லிடு வாங்க, சில குழந்தைக
 தப்பா  சொல்வாங்க.  பொறுமையா
  மறுபடி, மறுபடி  சொல்லிக் கொடுப்பாங்க.
  நினைவாற்றல்  அதிகரிக்க சில பயிற்சி
 கொடுப்பாங்க.  அதாவது  1  ,2  ,3  , 4 , 5.
நம்பர்களை  ஒன்னு  தமிழ்லயும,  ஒன்னு
 இங்லீஷ்லயும்  சொல்ல  சொல்வாங்க
  அதாவது   இப்படி,
1  ஒன்று
2-two
3- மூன்று
4-  four
5-  ஐந்து
6-   six
7-  ஏழு
8-  eight
9-   ஒன்பது
10-   ten.

இப்படி மாறி  மாறி  யோசித்து  சொல்லும்
 போது  குழந்தைகளின்  நினைவாற்றல்
அதிகமாகும்னு  சொல்வாங்க. உண்மை தானே.
அந்த  டீச்சரம்மா விடம் நான்
 உங்களுக்கு எப்படி  இப்படி  ஒரு  ஐடியா
 தோணிச்சுனு கேட்டேன்
 நான  நிறைய  பேருடய  வலைப்பதிவெல்லாம்
 படிப்பேன். அதுல தான் ஒருத்தர்
 இத பத்தி சொல்லி  இருந்தாங்க
 என்று  அவங்க  சொன்னாங்க.
வலைப்பதிவு  எழுத்தாளர்களால  எவ்வளவு
 நல்ல  விழயங்கள  நடக்குது  இல்லியா?

8 comments:

  1. அன்புடையீர்,

    வணக்கம்.

    தங்களின் இன்றைய பதிவான ‘மாத்தியோசி’ படித்து மகிழ்ந்தேன். அதுபற்றி தகவல் அளித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    3 வயது முதல் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக்கொடுத்தாலும், அவை அப்படியே, பசு மரத்து ஆணிபோல அவர்கள் மனதில் பதிந்துவிடும் என்பது உண்மையே.

    உங்கள் வீட்டுக்குப்பக்கத்து வீட்டு டீச்சரம்மாவின் இனிய சேவைகளுக்கும், அவர்களைப் பற்றி பதிவு எழுதியுள்ள தங்களுக்கும் என் இனிய பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    இப்படிக்குத் தங்கள் நலம் விரும்பி

    ReplyDelete
  2. வலைத்தளம் ஆரம்பித்ததற்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    அட இது உங்க பதிவு இல்லையா?

    இருந்தாலும் நல்லதொரு பதிவு. இப்படியே வாரத்திற்கு ஒரு பதிவாவது போடுங்கள். இப்படி இன்னொருவர் பதிவைப் போடும்போது இன்னாருக்கு நன்றி என்று குறிப்பிட்டு விடுங்கள்.

    ReplyDelete
  3. இன்னும் ஒரு விஷயம் நான் பின்னூட்டம் கொடுத்த உடனேயே அது உங்கள் பதிவில் வந்துவிட்டது. அப்படி இருப்பது சில நேரங்களில் ஆபத்தாகிவிடும். நீங்கள் அனுமதி தந்த பிறகே பின்னூட்டங்கள் வெளியிடப்பட வேண்டும். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. ஆண்டி இது நா எளுதினதுதா. குருஜி வெளாடுறாங்க. அப்புறம் எப்பூடி நா அனுமதி கொடுக்கோணும் வெளங்கலியே சொல்லி தாரீங்களா

    ReplyDelete
  5. ஆண்டி இது நா எளுதினதுதா. குருஜி வெளாடுறாங்க. அப்புறம் எப்பூடி நா அனுமதி கொடுக்கோணும் வெளங்கலியே சொல்லி தாரீங்களா

    ReplyDelete
    Replies
    1. :) நானு விளையாடுறேனா? :)

      நல்லா ஜோரா சொல்லித்தருவாங்க. ஜெயாவை கெட்டியா புடுச்சிக்கோங்கோ, முருகு .... விடாதீங்கோ.

      Delete