Sunday 7 May 2017

குருஜி கும்புட்டுகிடுதன்....

குருஜி.. நானு ப்ளாக்கு பக்கத்தால வந்துபிட்டே  வெகு...வெகு...நாளாகிபோச்சுல்லா... அல்லா  வெசயமும்  மறந்துபிட்டேன்....
 உங்கட பரிசு பொருள அல்லாத்தையும் போட்டு சந்தோசமா பதிவு எளுத வந்தேனா.... களுத   சொதப்பிகிட்டே போகுது... கோவமா வந்துகிட்டுது...

எப்படியும் எங்கட குருஜிய விட்டா  ஆரும் இந்த பக்கத்தால வர போகுதில்லா... எனிக்கு  எங்கட குருஜி மட்டிலுமே போதுமுல்லா...

 இந்த பின்னூட்ட  போட்டிலா  நடந்து முடிஞ்சே எம்பூஊஊஊஊட்டு நாளாகி போச்சுது.. கெலிச்ச அல்லா பேத்துக்கும் குருஜி ஒடனாலே பணவிசிறி பரிசெல்லா அனுப்பி போட்டாக.. நானு எங்கட குருஜிக்கு ரொ.....ம்...ப...வே...
 ச்பெஸலு.. அதாங்காட்டி எனிக்கு நெறய நெறய அனுப்பினாக.

 இதுபோல போட்டிலா வச்சி  கைகாசு செலவு பண்ணி ஆராச்சம் இப்பூடிலா  பண்ணி போடுவாகளா.. குருஜி பண்ணி போட்டாக..

 அதல்லா கரீட்டுதா.. திறமசாலிகள பாராட்டி பரிசு கொடுத்து உற்சாகபடுத்தி ஊக்கபடுத்தி பாராட்டு பத்திரமல்லா கொடுத்துகினது சரிதா..... குருஜி பாராட்டினவக அல்லா பேதுகிட்டாலயும் ஏதேதோ   தெறம இருந்திச்சி   இந்த
  மக்கு  முருகு  கிட்டால இன்னா தெறமைய கண்டுகிட்டாக...

ஒரு வயசாளி ஐயரு மாரு குட்டி முஸுலிம்  பொண்ண சோட்டுகாரியா ஏத்துக்கிட எம்பூஊஊஊட்டு பெரிய மனசு இருந்துகிடோணும்  எங்கட குருஜி என்னிய சோட்டுகாரியா ஏத்துகிட்டாபொறவாலதா  எனிக்கும் எங்கட குடும்பத்தாளுகளுக்கும்  மேஜிக்கு போட்டாப்புல மிரகிளா  நெறய நல்ல சந்தோஸமான வெசயங்க நடந்து போச்சி.. குருஜி  நானு மௌத் ஆகுவரை உங்கள நன்றியோட நெனச்சிகிட்டே இருந்துகிடுவன்லா


இன்னங்கோட நெறய..நெறய எளுத நெனச்சேன்.. குருஜிய ரொம்ப கஸ்டப்படுத்தக்கோடாதுல்லாஅதால....ஸ்...டா...ப்...பிக்குறேன்

guruji

guruji

guruji

Saturday 1 August 2015

ரோஜா மலரே

பதிவில்  படங்களைச்சேர்ப்பது எப்படின்னு விவரமாக சொல்லித்தந்த
 என் அன்புக்குறிய்  குருஜி  திரு கோபாலகிருஷ்ணா சாருக்கு நன்றிகள்.

Tuesday 28 July 2015

மாத்தி யோசி.

எங்க  பக்கத்து  வீட்ல  ஒரு  டீச்சரம்மா
இருக்காங்க. சனி, ஞாயிறு களில்  3  முதல்
8 வயசு குழந்தைகளுக்கு  வித்யாசமான  முறையில்
  பாடம்  சொல்லி  கொடுப்பாங்க.
 3- வயசுக்  குழந்தைகளுக்கு  மழலைப்  பேச்சு
 மாறி  தெளிவான  பேச்சு  வரும் பருவம்.

இங்லீஷ் ல  டங்  ட்விஸ்ட் டுனு சொல்லு வாங்க
 இல்லியா?  அதற்கான  பயிற்சி  சொல்லிக்
 கொடுப்பாங்க. இங்லீஷ்ல கொஞ்சம், தமிழ்ல  கொஞ்சம்னு
மாறி  மாறி  சொல்லிக்  கொடுப்பாங்க.
எல்லாமே  சுலபமான  வார்த்தைகளாகத்
 தான் இருக்கும்
  இங்லீஷில,  GOOD  BLOOD. bad  bloodதமிழில்
 எங்க  தாத்தா  தெச்ச  சட்டை.  னு
 சொல்ல  சொல்லு  வாங்க. சில  கழந்தைக
 சரியா  சொல்லிடு வாங்க, சில குழந்தைக
 தப்பா  சொல்வாங்க.  பொறுமையா
  மறுபடி, மறுபடி  சொல்லிக் கொடுப்பாங்க.
  நினைவாற்றல்  அதிகரிக்க சில பயிற்சி
 கொடுப்பாங்க.  அதாவது  1  ,2  ,3  , 4 , 5.
நம்பர்களை  ஒன்னு  தமிழ்லயும,  ஒன்னு
 இங்லீஷ்லயும்  சொல்ல  சொல்வாங்க
  அதாவது   இப்படி,
1  ஒன்று
2-two
3- மூன்று
4-  four
5-  ஐந்து
6-   six
7-  ஏழு
8-  eight
9-   ஒன்பது
10-   ten.

இப்படி மாறி  மாறி  யோசித்து  சொல்லும்
 போது  குழந்தைகளின்  நினைவாற்றல்
அதிகமாகும்னு  சொல்வாங்க. உண்மை தானே.
அந்த  டீச்சரம்மா விடம் நான்
 உங்களுக்கு எப்படி  இப்படி  ஒரு  ஐடியா
 தோணிச்சுனு கேட்டேன்
 நான  நிறைய  பேருடய  வலைப்பதிவெல்லாம்
 படிப்பேன். அதுல தான் ஒருத்தர்
 இத பத்தி சொல்லி  இருந்தாங்க
 என்று  அவங்க  சொன்னாங்க.
வலைப்பதிவு  எழுத்தாளர்களால  எவ்வளவு
 நல்ல  விழயங்கள  நடக்குது  இல்லியா?

Friday 3 July 2015

நோன்பு கஞ்சி.

நோன்பு  கஞ்சி.

இந்த  ரமலான்  மாதத்தில் பகல்  பூராவும்  விரதம் இருந்து சூரிய உதயத்திற்கு  முன், இரவு சூரிய  அஸ்தமிச்ச பிறகு தான்  ஏதாவது  சாப்பிடுவோம்.பெரும்பாலான  இ ஸ்லாமியர் வூடுகளில் இந்த வழக்கம்  கடைப்பிடித்து  வருகிறார்கள். அது மட்டுமில்ல.  5--நேர தொழுகையும் கட்டாய  கடமையா கடைப்பிடித்து  வராங்க

நோன்பு கஞ்சி எல்லார் வீடுகளிலும் செய்வார்கள். நிறய  பதிவர்கள் இது பற்றி  எழுதி  இருப்பாங்க. நான்  இன்னும்  யாருடய  பதிவு  பக்கமும் போகல.  என் அம்மா  செய்யும்  பக்குவம் பற்றி  இங்க  சொல்லறேன்

தேவையான பொருட்கள்.

பச்சரிசி,  பயத்தம் பருப்பு---------250+ 250கிராம்  ரவை பதத்தில் பொடிக்கவும்

காய்கறிகள்,     பச்சைபட்டாணி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், சிவப்பு கலர்  குடை மிளகாய், உரளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து  அரைக் கிலோ.

எல்லா  காய்களையும் சிறு  துண்டுகளாக  கட் செய்து கொள்ளவும்

பூண்டு, சின்னவெங்காயம், இஞ்சி,  பட்டை, சோம்பு க்ராமபு2, ஏலக்காய் 2,புதினா, கொத்தமல்லி 2 பச்சமிளகா  இவைகளை  நைசாக அரைக்கவும்

அடுப்பில  அடி கனமான ஒரு பாத்திரம் வைத்து நிறய  தண்ணீர் ஊற்றி  கொதிக்க விடவும்.அரிசி பருப்பு  ரவையை போட்டு நன்கு  கிளறி விடவும் அரை  பாகம்  வெந்ததும்  கட் செய்து  வைத்திருக்கும்  காய்களைச் சேர்க்கவும் எல்லாம் சேர்ந்து  நன்கு  வெந்ததும் அரைத்து  வைத்திருக்கும்  மசாலா  சேர்த்து  கொதிக்க  விடவும்.  சூடாக கொஞ்சம் தளர்வாக  சாப்பிட  செம  டேஸ்டா  இருக்கும் உடம்புக்கு  தேவையான  ஊட்ட  சத்துக்களும்  கிடசுசுவிடும்

Wednesday 1 July 2015

குட் ,மார்னிங்க்

எல்லாருடைய  வாழ்விலும் வசந்தம் வீச அந்த எல்லாம் வல்ல இறைவன்
அருள்புரிவானாக.