Sunday, 7 May 2017

குருஜி கும்புட்டுகிடுதன்....

குருஜி.. நானு ப்ளாக்கு பக்கத்தால வந்துபிட்டே  வெகு...வெகு...நாளாகிபோச்சுல்லா... அல்லா  வெசயமும்  மறந்துபிட்டேன்....
 உங்கட பரிசு பொருள அல்லாத்தையும் போட்டு சந்தோசமா பதிவு எளுத வந்தேனா.... களுத   சொதப்பிகிட்டே போகுது... கோவமா வந்துகிட்டுது...

எப்படியும் எங்கட குருஜிய விட்டா  ஆரும் இந்த பக்கத்தால வர போகுதில்லா... எனிக்கு  எங்கட குருஜி மட்டிலுமே போதுமுல்லா...

 இந்த பின்னூட்ட  போட்டிலா  நடந்து முடிஞ்சே எம்பூஊஊஊஊட்டு நாளாகி போச்சுது.. கெலிச்ச அல்லா பேத்துக்கும் குருஜி ஒடனாலே பணவிசிறி பரிசெல்லா அனுப்பி போட்டாக.. நானு எங்கட குருஜிக்கு ரொ.....ம்...ப...வே...
 ச்பெஸலு.. அதாங்காட்டி எனிக்கு நெறய நெறய அனுப்பினாக.

 இதுபோல போட்டிலா வச்சி  கைகாசு செலவு பண்ணி ஆராச்சம் இப்பூடிலா  பண்ணி போடுவாகளா.. குருஜி பண்ணி போட்டாக..

 அதல்லா கரீட்டுதா.. திறமசாலிகள பாராட்டி பரிசு கொடுத்து உற்சாகபடுத்தி ஊக்கபடுத்தி பாராட்டு பத்திரமல்லா கொடுத்துகினது சரிதா..... குருஜி பாராட்டினவக அல்லா பேதுகிட்டாலயும் ஏதேதோ   தெறம இருந்திச்சி   இந்த
  மக்கு  முருகு  கிட்டால இன்னா தெறமைய கண்டுகிட்டாக...

ஒரு வயசாளி ஐயரு மாரு குட்டி முஸுலிம்  பொண்ண சோட்டுகாரியா ஏத்துக்கிட எம்பூஊஊஊட்டு பெரிய மனசு இருந்துகிடோணும்  எங்கட குருஜி என்னிய சோட்டுகாரியா ஏத்துகிட்டாபொறவாலதா  எனிக்கும் எங்கட குடும்பத்தாளுகளுக்கும்  மேஜிக்கு போட்டாப்புல மிரகிளா  நெறய நல்ல சந்தோஸமான வெசயங்க நடந்து போச்சி.. குருஜி  நானு மௌத் ஆகுவரை உங்கள நன்றியோட நெனச்சிகிட்டே இருந்துகிடுவன்லா


இன்னங்கோட நெறய..நெறய எளுத நெனச்சேன்.. குருஜிய ரொம்ப கஸ்டப்படுத்தக்கோடாதுல்லாஅதால....ஸ்...டா...ப்...பிக்குறேன்

39 comments:

 1. 31.12.2015 அன்றே முடிந்த 100% பின்னூட்டப் போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ள முருகுவுக்கு மீண்டும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  மேற்படி போட்டிக்கு சம்பந்தப்பட்ட பதிவுகளின் இணைப்புகள்:

  1) சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு:
  http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

  2) சாதனையாளர் விருது ... செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள் [வசந்தம்] http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html

  3) நேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா
  http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html


  31.12.2015 முடிந்த போட்டிக்கான இந்தப் பரிசுப்பொருட்கள், சுமார் 22 மாதங்கள் கழித்து, தற்சமயம் மஸ்கட்டில் இருக்கும் முருகுவின் கைகளை எட்டியுள்ளது .... ஆச்சர்யம்தான். :)

  நான் கேட்டதும் விலாசம் + போன் நம்பர் முதலியன எனக்கு உடனே கொடுத்திருந்தால் இதனை எப்போதோ (31.12.2015 க்கு முன்பாகவே) வாங்கிக்கொண்டு இருந்திருக்கலாம்.

  இன்னும் இன்றுவரை வாங்கிக்கொள்ளாமல் இன்னொரு சண்டிக்குதிரை மட்டும் பாக்கியுள்ளது. இன்றுதான் அது எனக்குத் தன் போன் நம்பரை மட்டும் கொடுத்துள்ளது. விலாசம் இன்றுவரை கொடுக்காமல் சண்டித்தனம் செய்து வருகிறது. :(

  இன்றுபோல என்றும் சந்தோஷமா, செளக்யமா, க்ஷேமமா, மகிழ்ச்சியுடனும் மலர்ச்சியுடனும் இருங்கோ முருகு.

  அன்புடன் குருஜி

  ReplyDelete
  Replies
  1. குருஜிஈஈஈ எனிக்கு. இன்னா செல்லுகின்னெ வேளங்கிளியே
   நன்றோநன்றி

   Delete
 2. பேசாம, குருஜியோட பதிவுகளில் இருந்தே பத்தி பத்தியாக சுட்டு, உங்கள் பதிவாக ஆக்கலாமே! ஆரம்பகாலத்திற்கு மட்டும். அதன்பிறகு உங்களுக்கே எழுத வந்துவிடாமலா போகும்! ()'மௌத்' என்ற ஆங்கில வார்த்தையெல்லாம் வேண்டாமே! நல்ல தமிழில் எழுதலாமே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்லமான ஸாரே..))))) எனிக்கு வலைப்பதிவெல்லா சுட்டுபோடாலும் எளுதிகிட ஏலாது.. இதுல குருஜியோட பதிவுலேந்து எத்த சுட்டுகிட ஏலும்.. பொறவால மௌத் னா அது இங்கிபிலிஷு வார்த்தையினு ஆராங்காட்டி சொல்லினாக... உருது.. அல்லாகாட்டி இந்தி வார்த்தைல் லா அது. வெளங்கிச்சா வந்ததுக்கும் கமண்டு தட்டி உட்டதுக்கும் நன்றிங்க...

   Delete
 3. மனசில இருக்கிறத அப்படியே வார்த்தைகள்ல வடிச்சிருக்கு. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கந்தசாமி ஐயா.. மனசுக்குள்ளாற இன்னுங்கோட கொள்ள வெசயம் கெடக்குதே..நன்றி ஐயா...

   Delete
 4. மிகவும் அருமையான பதிவு. கொச்சைத் தமிழில் குருவுக்கு மரியாதை தருவது மிகவும் சுவாரஸ்யம். அருமையான பதிவு mru.

  வாழ்த்துக்கள்....தொடரருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. ராஜலச்சுமி மேடம் எங்கட எளுத்த பிரிஞ்சுக்க ஏலுதா. நன்றிங்க..

   Delete
 5. குருஜி மட்டும் போதும் என்னும் அளவு குருபக்தி உள்ள முருகு வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. ஆமுங்க கோமதிஅம்மா.. எனிக்கு அல்லாமே எங்கட குருஜிதா..நன்றிங்க..

   Delete
 6. குருஜி நானு மௌத் ஆகுவரை உங்கள நன்றியோட நெனச்சிகிட்டே இருந்துகிடுவன்லா
  உங்கள் குருபக்தியை மெச்சுகிறேன் முருகு! உங்களிடமும் திறமை இருக்கின்றது. கோபு சாரின் எல்லாப்பதிவுகளையும் படித்துப் பின்னூட்டமிட்டது சாதாரண சாதனையா? போட்டி வைத்துப் பரிசளித்த கோபு சாரை, குருவாக ஏற்றுக்கொண்டு அவரைக் கும்பிடுவதற்காக தனியாக ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள். உள்ளத்தில் நினைப்பது எவ்விதப் பாசாங்குமின்றி அப்படியே வார்த்தைகளாய் வெளிப்பட்டிருக்கின்றது. பேசும் தமிழில் இருந்தாலும், என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுகளும், வாழ்த்தும் முருகு! தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து உங்கள் வசப்படும்! குருபக்தியும் அதற்குத் துணை செய்யும்!

  ReplyDelete
  Replies
  1. கலையரசி மேடம் வாங்க. எங்கட எளுத்த பிரிஞ்சுக்க ஏலுதா. ஹையோ.. சந்தோசமாயிட்டு...இந்த பதிவு போடும்ன்னா எம்பூட்டு யோசிச்சு போட்டேன்வெளங்குதா.. ஏதாச்சும் தப்புதப்பா டைப்பி பேடுவன்லா அல்லா பேரும் பகடி பண்ணிபோடவாகல்லா. நன்றிங்க..

   Delete
 7. என்னா நடக்குது இங்கின?:) முறுக்கு... வெரி சோரி:) முருகு.. நீங்க ரொம்பவும் ஓவராத்தான் குருஜி(உங்க முறையில் சொன்னேன்) ஐ புகழ்றீங்க...:)

  நான் அப்போ வலைப்பக்கம் இல்லாமல் போனதாலதான் பரிசை எல்லாம் நீங்க அள்ளிட்டீங்க:) இல்லை எனில்... எல்லாம் எனக்கே கிடைச்சிருக்கும் தெரியுமோ?:)

  ஹா ஹா ஹா சரி சரி இருந்தாலும்.. இப்பூடித் தமிழ் பேசியே பரிசை தட்டிச் சென்றமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹலோ சுவீட் ஸிக்ஸ்டீனு மேடம்.. ஓவரால்லா ஏதும் புகளல. நா சொல்லிகினது ரொம்ப கம்மிதா..இப்பூடில்லா சொல்லிகின கோடாது.. வெளங்கிச்சா.... நன்றி...

   Delete
 8. இயல்பாக நன்றாக எழுத வருகிறது
  தாராளமாக நிறைய எழுதலாமே

  இப்படி இயல்பாக எழுதுவதுதான் கஷ்டம்

  ஸ்டாப் பண்ணாமல் எழுதவும்

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. ரமணி ஸாரே என்னிய வச்சி காமெடி ஏதும் பண்ணிகிடலேதானே. இதுபோல கொச்ச தமிள வச்சிகிட்டு நா போயி என்னத்த எளுதி கிளிச்சுபோடேலும் நன்றிங்க..

   Delete
 9. குருஜிக்கு நன்றி சொல்ல இட்ட பதிவை இரசித்தேன்! பாராட்டுகள்! குருஜிக்கு அமைந்த வாசக இரசிகர் வட்டம் மலைக்க வைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சேஸாத்ரிஐயா. நீங்க சொல்லிகனதுதா கரீட்டு குருஜியோட வாசக வட்டம்தான் ரொ......ம்....ப....வே பெரிசு... இங்கூட்டு வந்தவக அல்லா பேருமே குருஜிக்காகதானே வந்தீக..நன்றி...

   Delete
 10. இங்கு பாராட்ட வந்தது குருவிற்காக அல்ல. குருவை மிஞ்சிய சிஷ்யையாக நீங்கள் வளரவேண்டும் என்பதற்காகத்தான். வெள்ளந்தியாக எழுதும் தங்களுக்கு பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. ஹையோ சந்தோசமுங்க...நன்றிங்க ஐயா

   Delete
 11. //இந்த
    மக்கு  முருகு  கிட்டால இன்னா தெறமைய கண்டுகிட்டாக...//

  நிறைகுடம் தளும்பாதுல்லா.....என்ன தெறம உங்க கிட்டால இல்ல முருகு..நெறய தெறம இருக்குது வெளிப்படுத்ததான் சரியான வாய்ப்பு கிடைக்கல... வாய்ப்புகிடச்சா நீங்களும் தூள் கெளப்புவீங்க. உங்களுக்கு கைதூக்கிவிட ஒங்க குருஜி இருக்காங்கல்ல பிறகு என்ன கவல. அடிச்சு தூள் கெளப்புங்க..

  ReplyDelete
 12. அன்புள்ள முருகு அழகா எழுதரே. மநதிலே இருக்கறதே கொட்டி எழுதறே. உன் பதிவளைப் பார்த்து உன்பாஷையில் எழுதமுடியலே. நல்ல குரு உனக்கு. நீயும் மிஞ்சியே பேர் வாங்கிகிட்டு இருக்கே. ரொம்பவே ஸந்தோஷம் அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ஹையோ வாங்க ஆண்டி.. எம்பூட்டூ பேருக என்பக்கத்தால வந்துகினாக... சந்தோசமாகீதுநன்றிங்க..

   Delete
 13. ஹையோ இவுக வந்துபிட்டு இன்னாலாமோ சொல்லிகினாகளே.. கேக்கயில சந்தோசமாதா கீது.. வெறும் கையி மொளம் போட்டுகிடுமா ஸாரே..... நன்றிங்க

  ReplyDelete
 14. முருகு வணக்கங்க.. நானு ஏற்கனவே கோபால்ஸார் பதிவுல உங்க உருக்கமான நெகிழ்ச்சியான வெள்ளந்தியான..(ஸ்...ஹப்பாடா...) நேயர்கடிதாசி படச்சு நெறய கமண்டும் போட்டிருக்கேன் ஒருவாட்டி உங்களபோலவே கொச்சதமிளுல பின்னூட்டம்போட்டு உங்க கிட்ட செமத்தியா வாங்கி கட்டிகிட்டேனே. அதெல்லாம் மறக்க மனம் கூடுதில்லயே..))))

  குருஜிக்கு நல்லவிதமா மரியாதை பண்ணியிருக்கிங்க.. நல்லாருக்கு வாழ்த்துகள்..ஒங்கட குருஜி கிட்ட கேட் சொல்லுங்க மறுபடி போட்டிகள் எப்ப வைக்கபோறாங்கனு எனக்கும் கோபால்ஸார் கையால பரிசுகள் வாங்கணுமில்ல..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...குருஜி இவுக கேக்குத கேட்டிகளா...ஸாரே ஒங்கட கமண்டு ஸூப்பராகீது ஒங்கட பேருதா சொப்புது ஸ்ட்ராபெர்இ ஸாரே..

   Delete
 15. பெரிப்பா ஓடிவாங்கோ. இந்த பதிவ டிறான்ஸ்லேட் பண்ணிதாங்கோ..பதிவுக்கு சம்பந்தமா எதானும் கமெண்ட் போடணுமில்லையா
  முருகு பதிவு நன்னாருக்கு

  ReplyDelete
  Replies
  1. அதாரது பெரிப்பானு ஆர சொல்லினிக...குருஜி ஆருஆரெல்லாமோ வாறாக. கமண்டு டைப்புறாக ஆருன்னு வெளங்கிகிட ஏலலியே.... ஹாப்பி நன்றிங்க

   Delete
 16. முருகு எவ்வளவு அழகா பதிவு அதுவும் ஒங்க குருஜிய பாராட்டி.. இதுபோல எந்த சிஷ்யை யாருக்கு கிடைப்பா. குருஜி சிஷ்யை இருவருக்குமே வாழ்த்துகள் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஷாமைன்மேடம் இதுபோல குருஜி ஆருக்கு கிடைப்பாகல்லா... நீங்க மாத்தி சொல்லினிக. நன்றிங்க

   Delete
 17. முருகு பதிவு நல்லா இருக்குது வாழ்த்துகள்

  ReplyDelete
 18. நன்றிங்க..

  ReplyDelete
  Replies
  1. ஏய் முருகு... நீ இம்பூட்டு பெரிய ஆளா ஆகிபோட்டியா கோபூஜ கையால பரிசு வாங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும் குருஜி குருஜின்னு கிலோ கணக்குல ஐஸ வச்சு பரிசா நெறய போருளுகள வாங்கிட்டியா ஒங்கட குருஜி உனக்கு மட்டும் வெல்விஷரா இல்ல... உனக்கு எனக்கு இதுபோல இன்னும் நெறய பேருக்கு வெல்விஷராதான் இருக்காங்க

   Delete
 19. வாம்மா சிப்பிக்குள் முத்தே...முன்னாவே சொகமா.???? இப்ப எந்த ஊருல குந்திட்டுகெட்கே. வேலக்கு போறியா ஒங்கட அம்மி வூட்ல அல்லா பேரும் சொகமா.. ஏய் முன்னா மெயிலு அனுப்புட்டி அங்கூட்டு பேசிக்கிடலா..

  ReplyDelete
 20. அன்புள்ள முருகு,

  நீ மிகவும் அதிர்ஷ்டக்காரி. இங்கு உன் இந்தப் பதிவுக்கு யார் யாரெல்லாமே பெரிய மனுஷ்யாலெல்லாம் வந்து கருத்துச்சொல்லிப் பாராட்டியுள்ளார்கள். நீ இதுபோல ஒரு பதிவு வெளியிட்டுள்ளது அவர்களுக்கெல்லாம் எப்படித்தான் தெரிந்ததோ. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :))))))

  அதுவும் நம் முன்னா பார்க் ஆசாமிகளான ஒன்பது பேர்களில் உன்னையும் என்னையும் சேர்த்து ஏழு பேர்கள் இதுவரை இங்கு வந்து விட்டனர். தற்சமயம் உடம்பு சரியில்லாத ஜெயந்தி ஜெயா மாமி மட்டும் நாளைக்கு வந்துவிடுவார்கள் என நம்பப்படுகிறது. அத்தோடு எட்டு ஆகி விடும்.

  என்னதான் இந்த எட்டு ஆசாமிகள் எல்லோரும் வருகை தந்திருப்பினும் அந்த ‘எங்காளு’ ஆன மற்றொரு சண்டிக்குதிரை இங்கு வராததில் உன்னைப்போலவே எனக்கும் ஒரே அழுவாச்சியாகத்தான் வருகிறது. கையில் ஏராளமான டிஷ்யூ பேப்பருடன் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக நான் உள்ளேனாக்கும். :(

  நானும் சமீபத்தில் என் வலைத்தளத்தினில் ஒரு நான்கு பதிவுகள் போட்டும், இந்த முன்னா பார்க் ஆசாமிகள் ஒருவர்கூட (ஈ .... காக்காக்கூட) எட்டிப்பார்க்க வில்லை ...... முருகு ...... நீ உள்பட :(

  அதனால் நம் திருவாளர்: வே. நடன சபாபதி அவர்கள் மேலே சொல்லியுள்ளது போல .... முருகு நீ இப்போதே ..... குருவுக்கு மிஞ்சிய சிஷ்யை ஆகி ஆகிவிட்டாய். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  இதை...இதை...இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

  வாழ்க ! வளர்க!!

  அன்புடன் குருஜி

  ReplyDelete
 21. குருஜி நீங்க சொல்லிகினது அம்பூட்டும் கரீட்டுதா..... "ஒங்கட ஆளு "எங்கூட்டு இருந்துகிட்டாலும் இங்கூட்டு இளுத்து வந்துபோடுங்க.... அவுக வந்துபிட்டாதான எனிக்கும் குஷிஆகிபோகும்லா...நாங்க ரொம்பவே முட்டிகிட்டோ தா.. அதெல்லா ஒரு தமாஸுக்காகல்லா..

  ReplyDelete
 22. முருகு கூப்பிட்டு வராம இருப்பேனா அதான் " ஓடி" யே வந்துட்டேன். இப்ப குஷியா. பதிவு நல்லா போட்டிருக்கே. உங்கட குருஜி என்ன சாதாரண ஆளா............
  நாம ரெண்டு பேரும் முட்டிகிடதெல்லாம் சிறுபிள்ளைக வெளாட்டும்மா.. உங்கட குருஜி கூட என் ஃப்ரெண்ட்ஷிப் கூட முட்டல்...மோதலில்தான் ஆரம்பிச்சது தெரியமா... இப்ப பாரு.....

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 9 May 2017 at 21:44

   அடேடே, வாங்கோ...ம்மா பூந்தளிர் மேடம். செளக்யமா சந்தோஷமா இருக்கேளா? உங்களைப் பார்த்து எத்தனை நாட்கள் / வருஷங்கள் ஆச்சு தெரியுமா? உங்களை நான் நினைக்காத நாள் இல்லை. ஆனாலும் ‘சித்ரா பெளர்ணமி’யான இன்று முழு நிலவு போல பளிச்சுன்னு இங்கு வருவீர்கள் என நான் நினைக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை. என் மனதுக்கு இன்று மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போதும் நான் அழுதுகொண்டே இருக்கிறேன். ஆனால் இது ‘ஆனந்தக் கண்ணீர்’ மட்டுமே ஆகும். :)

   //முருகு கூப்பிட்டு வராம இருப்பேனா அதான் " ஓடி" யே வந்துட்டேன். இப்ப குஷியா.//

   வெரி குட். முருகுவுக்காகவாவது இங்கு ”ஓடி”யே வந்தீங்களே. முருகுவுக்கு மட்டுமா குஷியாக இருக்கும். உங்களின் நலம் விரும்பிகள் அனைவருக்குமே குஷியோ குஷி தானாக்கும். :)

   // பதிவு நல்லா போட்டிருக்கே.//

   அதெல்லாம் சூப்பராப் போடுவாள் அவள் !

   //உங்கட குருஜி என்ன சாதாரண ஆளா............//

   அச்சச்சோ ..... இது வேறையா சந்தடி சாக்கில்? நான் எப்போதுமே மிகச் சாதாரண ஆள் மட்டுமேவாக்கும்.

   //நாம ரெண்டு பேரும் முட்டிகிடதெல்லாம் சிறுபிள்ளைக வெளாட்டும்மா..//

   அப்படியா !!!!! மிகவும் சந்தோஷம்.

   //உங்கட குருஜி கூட என் ஃப்ரெண்ட்ஷிப் கூட முட்டல்... மோதலில்தான் ஆரம்பிச்சது தெரியமா...//

   :) முட்டலும் மோதலும் இல்லாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமாகவும், எழுச்சியாகவும் இருக்காது. சுத்த வழுவட்டையாகிவிடும். நடந்ததெல்லாம் நன்மைக்கே என நினைச்சுக்கோங்கோ :)

   //இப்ப பாரு.....//

   இப்ப மட்டும் என்னவாம்? பதிவுகளுக்கு பின்னூட்டமிட வாங்கோ வாங்கோன்னு வருந்தி வருந்தி வெத்தலை-பாக்கு வெச்சு அழைக்க வேண்டியதாக உள்ளதாக்கும். ஆனால் எதையும் நீங்க கண்டுகொள்வதே இல்லையாக்கும் :(

   கொரியர் மூலம் பரிசுப் பொருட்களைப் பெற எங்கட முருகு சமத்தா தன் விலாசம் + போன் நம்பர் எல்லாம் கொடுத்துள்ளது போல, நீங்களும் எனக்குக் கொடுத்தால், உங்களுக்கான பரிசுகளையும், நான் கொரியரிலோ அல்லது நேரில் வந்தோ தருவேன் அல்லவா.

   2015 - 100% போட்டியில் பரிசு வென்ற எட்டு நபர்களில் உங்களுக்கு மட்டுமே, இன்னும் பரிசளிக்கப்படாமல் அது என்னிடம் பெண்டிங் ஆகவே உள்ளது.

   http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html உடனே

   முழு விலாசமும் எனக்கு அனுப்பிக்கொடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

   என்றும் பிரியமுள்ள
   கிருஷ்

   Delete
 23. ஹ......ஹையா... வந்துபிட்டாக... நன்றிங்க.. எங்காளு......

  ReplyDelete