Friday 3 July 2015

நோன்பு கஞ்சி.

நோன்பு  கஞ்சி.

இந்த  ரமலான்  மாதத்தில் பகல்  பூராவும்  விரதம் இருந்து சூரிய உதயத்திற்கு  முன், இரவு சூரிய  அஸ்தமிச்ச பிறகு தான்  ஏதாவது  சாப்பிடுவோம்.பெரும்பாலான  இ ஸ்லாமியர் வூடுகளில் இந்த வழக்கம்  கடைப்பிடித்து  வருகிறார்கள். அது மட்டுமில்ல.  5--நேர தொழுகையும் கட்டாய  கடமையா கடைப்பிடித்து  வராங்க

நோன்பு கஞ்சி எல்லார் வீடுகளிலும் செய்வார்கள். நிறய  பதிவர்கள் இது பற்றி  எழுதி  இருப்பாங்க. நான்  இன்னும்  யாருடய  பதிவு  பக்கமும் போகல.  என் அம்மா  செய்யும்  பக்குவம் பற்றி  இங்க  சொல்லறேன்

தேவையான பொருட்கள்.

பச்சரிசி,  பயத்தம் பருப்பு---------250+ 250கிராம்  ரவை பதத்தில் பொடிக்கவும்

காய்கறிகள்,     பச்சைபட்டாணி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், சிவப்பு கலர்  குடை மிளகாய், உரளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து  அரைக் கிலோ.

எல்லா  காய்களையும் சிறு  துண்டுகளாக  கட் செய்து கொள்ளவும்

பூண்டு, சின்னவெங்காயம், இஞ்சி,  பட்டை, சோம்பு க்ராமபு2, ஏலக்காய் 2,புதினா, கொத்தமல்லி 2 பச்சமிளகா  இவைகளை  நைசாக அரைக்கவும்

அடுப்பில  அடி கனமான ஒரு பாத்திரம் வைத்து நிறய  தண்ணீர் ஊற்றி  கொதிக்க விடவும்.அரிசி பருப்பு  ரவையை போட்டு நன்கு  கிளறி விடவும் அரை  பாகம்  வெந்ததும்  கட் செய்து  வைத்திருக்கும்  காய்களைச் சேர்க்கவும் எல்லாம் சேர்ந்து  நன்கு  வெந்ததும் அரைத்து  வைத்திருக்கும்  மசாலா  சேர்த்து  கொதிக்க  விடவும்.  சூடாக கொஞ்சம் தளர்வாக  சாப்பிட  செம  டேஸ்டா  இருக்கும் உடம்புக்கு  தேவையான  ஊட்ட  சத்துக்களும்  கிடசுசுவிடும்

20 comments:

  1. ஆஹா, நோன்பு கஞ்சி வைக்கும் பக்குவம் சொல்லியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    //5--நேர தொழுகையும் கட்டாய கடமையா கடைப்பிடித்து வராங்க//

    மிகவும் நல்ல செயல். கேட்கவே புனிதமாக உள்ளது. சந்தோஷம்.

    ReplyDelete
  2. படம் கூட சேர்க்க நெனச்சேன். எப்படி போடனும்னு தெரியல்ல.

    ReplyDelete
    Replies
    1. //படம் கூட சேர்க்க நெனச்சேன். எப்படி போடனும்னு தெரியல்ல.//

      அதுபற்றி பிறகு ஒரு நாள், நானே அழகாக மெயில் மூலம் பாடம் நடத்திச் சொல்லித்தருகிறேன். என் பதிவுகளிலும் ஆரம்பத்தில் 6 மாதங்களில் .... முதல் 100 பதிவுகளில் ..... படங்களே ஒன்றும் என்னால் தர முடியவில்லை. பிறகுதான் கற்றுக்கொண்டேன். அதுபற்றிகூட இதோ இந்தப்பதிவினில் நான் விரிவாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2011/12/2011.html அவசியம் படித்துவிட்டு கமெண்ட்ஸ் போடுங்கோ.

      அன்புடன் கோபு

      Delete
    2. ப்ளீஸ் சார் படங்கள எப்படி இணைக்கணும்னு மெயில்ல அனுப்புங்க நீங்க அனுப்பி இருக்கும் லிங்க போயி படிச்சு பார்க்கிறேன் சார்.

      Delete
  3. அன்புள்ள சகோதரி செல்வி: மெஹ்ருன் நிஸா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (05.07.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/07/35.html

    ReplyDelete
    Replies
    1. தகவல் சொன்னதுக்கு நன்றி சார்

      Delete
  4. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் தளத்தை அவரது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. தங்கள் பதிவுகளைப் படித்தேன். பாராட்டுக்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சார்

      Delete
  5. திரு. வை. கோ. பதிவிலிருந்து இத்தளத்திற்கு வந்தேன்.

    இந்த சிறப்பு மிகுந்த ரமலான் மாதத்தில் சுவை மிகுந்த 'நோன்புக் கஞ்சி' செய்முறையைப் படித்தேன்.
    இதன்படி செய்தால் வித்தியாசமான சுவையாகத்தான் இருக்கும்.

    திரு. வை. கோ. சார் வழி காட்டுதல்படி,
    புகைப்படம் இன்ஷா அல்லாஹ் பிறகு இணைத்துக் கொள்ளலாம்.!!!

    ReplyDelete
    Replies
    1. தகவல் சொன்னதற்கு நன்றி சகோ.

      Delete
  6. தகவல் சொன்னதுக்கு மிகவும் நன்றி சார்

    ReplyDelete
  7. நோன்பு காஞ்சி பற்றி எழுதியதற்கு நன்றி. நானும் இதைச் செய்கிறேன் , பொங்கலுக்கு பதிலாகச் சிலதடவை.

    புதிய பதிவாளர் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்!

    திரு வை கோபாலகிருஷ்ணன் (http://gopu1949.blogspot.in/2015/07/35.html) உங்களைப் பற்றி எழுதி இருந்தார். அவர் நிறைய தமிழ் பதிவாளர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கும் நன்றி!

    ரமலான் பண்டிகைக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. முதல் சமையல் குறிப்புக்கு பொருத்தமான நோன்புக்கஞ்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சமீபத்திய சென்னை மழை வெள்ளத்திலே எங்கட ஜெயாவைக்காணோமே என இங்கு நான் ஒருவன் பத்து நாளைக்கு மேலாக தேம்பித்தேம்பி அழுதுக்குனு இருக்கேன் ..... இங்கே வந்து பார்த்தா ஜாலியா எங்கட முருகு கையாலே நோன்புக்கஞ்சி வாங்கிக்குடிச்சிட்டு இருக்காக ..... :)

      Delete
  9. ஹா ஹா. வாங்க வாங்க ஆண்டி இப்பூடித்தா குருஜிய அலயவிடோணும்

    ReplyDelete
  10. ஹா ஹா. வாங்க வாங்க ஆண்டி இப்பூடித்தா குருஜிய அலயவிடோணும்

    ReplyDelete
    Replies
    1. :) ஆஹா, முருகு உங்கட குருஜிய இப்படி ஈவு இரக்கமில்லாமல் அலையவிட ஆசையா? வேண்டாம் .... அப்புறம் நான் அழுதுடுவேனாக்கும். :)

      என்ன உங்களை ஆளையும் காணும், அட்ரஸ்ஸையும் காணும், மெயிலையும் காணும், பின்னூட்டங்களையும் காணும். உல்லாச உலகத்தில் இன்பக்கனா கண்டுக்கிட்டு ஜாலியா இருக்கீங்க போலிருக்கு. சந்தோஷம் முருகு.

      அன்புடன் குருஜி

      Delete
  11. நோன்பு கஞ்சி சூப்ராகவும் சுவையாகவும் இருக்கே. செய்முறையும் நல்லா சொல்லி இருக்கீங்க செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  12. நோன்பு கஞ்சி சூப்ராகவும் சுவையாகவும் இருக்கே. செய்முறையும் நல்லா சொல்லி இருக்கீங்க செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.

    ReplyDelete